முல்லைத்தீவு, ஒதியமலை கிராமத்தில் கடந்த 1984ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 02 ஆம் திகதி இலங்கை இராணுவத்தினரால் படுகொலை செய்யப்பட்ட 32 தமிழ் மக்களின் 40ஆம் ஆண்டு நினைவேந்தல் இன்றைய தினம் திங்கட்கிழமை உணர்வெழுச்சியுடன் நடைபெற்றது.
ஒதியமலைக் கிராமத்தில் படுகொலைசெய்யப்பட்டவர்களின் நினைவாக அமைக்கப்பட்டுள்ள நினைவுத்தூபி வளாகத்தில குறித்த நினைவேந்தல் செயற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டன.