அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கோளாவில் 02 பிரதேசத்தில் வீடொன்றின் முன்பகுதி முற்றாக எரிந்த நிலையில் உள்ளிருந்து 39 வயதுடைய குடும்பஸ்தர் ஒருவர் தீயில் கருகிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
மேற்படி வீட்டின் பிற்பகுதி கல் வீடாக அமைந்துள்ளதுடன் முன்பகுதியின் கூரை கிடுகினால் வேயப்பட்டிருந்தது. வீட்டின் முன்பகுதியே தீக்கிரையாகியுள்ளதுடன் தீக்கிரையான பகுதியிலேயே சடலம் எரிந்த நிலையில் மீட்கப்பட்டது.