ஊடக நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்து வரும் யுவதியின் வீட்டுக்குச் சென்ற அடையாளம் தெரியாதோர் குறித்த யுவதியின் மீதும் அவரது தாய் மீதும் வாள்வெட்டு தாக்குதலை நடத்தி விட்டு தப்பிச் சென்றுள்ளனர்.
குறித்த சம்பவம் யாழ்ப்பாணம் நீர்வேலி பகுதியில் இடம்பெற்றூள்ளது.
குறித்த சம்பவத்தில் நீர்வேலியை சேர்ந்த கணேசரத்தினம் வேனுஜா (வயது 24) மற்றும் அவரது தயாரான கணேசரத்தினம் யோகேஸ்வரி (வயது 65) ஆகிய இருவருமே வாள் வெட்டு காயங்களுக்க்குள்ளாகி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
தாக்குதல் சம்பவம் தொடர்பாக விசாரணைகளை முன்னெடுத்து வருவதாக அச்சுவேலி பொலிஸார் தெரிவித்தனர்.