புதிய வகை கோவிட் உலகம் முழுவதும் பரவி வருவதாகவும், இந்த புதிய வகை கோவிட்டை சர்வதேச வல்லுநர்கள் பிரோலா (Pirola) அல்லது பிஏ.2.86 என அறிமுகப்படுத்தியுள்ளதாகவும் சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளீயிட்டுள்ளன.
புதிய உலக சுகாதார அமைப்பின் (WHO) இடர் மதிப்பீட்டின்படி, பைரோலா என்ற புனைப்பெயர் கொண்ட புதிய கோவிட்-19 வகை BA.2.86, உலகின் பல பகுதிகளில் அதிகமான மக்களைப் பாதித்துள்ளதாக தெரிவித்துள்ளது.
ஆரம்ப காலத்தில் பரவிய கொவிட் வைரஸின் கொடிய ஒமிக்ரோன் மாறுபாட்டை விட இந்த மாறுபாடு மிகவும் பிறழ்ந்த மாறுபாடு என்றும் பரிந்துரைக்கப்படுகிறது.
தொண்டை புண், மூக்கு ஒழுகுதல் அல்லது அடைப்பு, இருமல் மற்றும் தலைவலி ஆகியவை இதன் அறிகுறிகளாகக் கூறப்படுகிறது.
பைரோலாவின் புதிய திரிபு மீண்டும் உலகம் முழுவதும் தொற்றுநோய்களின் எழுச்சியை ஏற்படுத்தும் என்று சுகாதார அதிகாரிகள் எச்சரித்து வருகின்றனர்.
அமெரிக்கா, பிரித்தானியா, சீனா, இஸ்ரேல், கனடா, டென்மார்க், தென்னாபிரிக்கா, சுவீடன், நோர்வே, சுவிட்சர்லாந்து மற்றும் தாய்லாந்து ஆகிய நாடுகளில் இந்த வகை இதுவரை இனங்காணப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.