உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விவகாரம்: மைத்திரிக்கு ஜனாதிபதி ஆணைக்குழு அழைப்பு!

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பாக குற்றப்புலனாய்வு திணைக்களத்திடம் வழங்கிய வாக்குமூலம் தொடர்பான ஆதரங்களை நாளையதினம் சமர்ப்பிக்குமாறு முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு ஜனாதிபதி ஆணைக்குழு கடிதமூலம் அழைப்பு விடுத்துள்ளது.

கடந்த ஆண்டு செப்டெம்பர் மாதம் சனல் 4 வெளியிட்ட ஆதாரங்களை ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழுவே இவ்வாறு அழைப்பு விடுத்துள்ளது.

உயர் நீதிமன்ற முன்னாள் நீதியரசர் ஐ.எம்.இமாம் தலைமையிலான விசாரணை ஆணைக்குழு தொடர்ந்து தாக்குதல் தொடர்பான தகவல்களை ஆராய்ந்து வருகின்றது.

இந்நிலையில் விசாரணை ஆண்க்குழுவின் தலைமைச் செயலாளர் திருமதி எஸ்.மனோகரன் இது தொடர்பான எழுத்துமூல அழைப்பை கடந்த 28ஆம் திகதி முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு அனுப்பிவைத்துள்ளார்.

இதேவேளை, முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன, ஏப்ரல் மாதம் 4ஆம் திகதி மாளிகாகந்த நீதவான் நீதிமன்றில் ஆஜராகி, உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் பின்னணி, இரகசியங்களை முன்வைக்குமாறு மாளிகாகந்த நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *