உக்ரைன் மீது ரஷ்யா 122 ஏவுகணைகள் மற்றும் 36 டிரோன்கள் மூலம் தாக்குதல் நடத்தியுள்ளது. கிட்டதட்ட 13 பேர் இதில் பலியாகியுள்ளதாக உக்ரைன் தெரிவித்துள்ளது.
போர் ஆரம்பித்த 22 மாதங்களில் இதுபோன்ற சரமாரியான தாக்குதல் எட்டு மாதங்களுக்குப் பின் இப்போதுதான் நடந்துள்ளதாக உக்ரைன் தெரிவித்துள்ளது.
கடந்த வியாழக்கிழமை (28) இரவு ஆரம்பித்து சரமாரியான வான்வழி தாக்குதல் நடத்தப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
உக்ரைன் ஜனாதிபதி வொலோடிமிர் செலென்ஸ்கி, உக்ரைன் 87 ஏவுகணைகள் மற்றும் 27 சாஹெத் வகை ட்ரோன்களைத் தடுத்து அழித்ததாகத் தெரிவித்துள்ளார்.
18 மணி நேரம் தொடர்ந்த இந்தத் தாக்குதலில் பல கட்டடங்கள், பாடசாலைகள், மருத்துவமனைகள் சேதமடைந்ததாக உக்ரைன் கூறியது.