ஈரான் மீது இஸ்ரேல் மீண்டும் தாக்குதல் – பல விமான சேவைகள் ரத்து!

ஈரானின் குறிப்பிட்ட இலக்குகள் மீது இஸ்ரேல் இன்று தாக்குதல் நடாத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் ஈரான் வான்பரப்பை தவிர்க்க சில விமான நிறுவனங்கள் தீர்மானித்துள்ளன என்றும் வெளிநாட்டு செய்திகள் தெரிவித்துள்ளன.

இதேவேளை இஸ்ரேல் தாக்குதலை நடத்தினால் மோசமான எதிர்வினை உடனடியாக ஆற்றப்படுமென ஈரான் வெளிவிவகார அமைச்சர் எச்சரித்துள்ள நிலையில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

மேலும் இஸ்ரேல் ஈரான் நிலைகள் மீது வான்தாக்குதல் நடத்தியுள்ளதாக அமெரிக்காவும் உறுதி செய்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *