ஈரானைத் தாக்குவதற்கு இஸ்ரேல் முன்னெடுத்துவரும் திட்டங்கள் குறித்த ஒக்டோபர் 15 ஆம் 16 ஆம் திகதியிட்ட இரண்டு இரகசிய ஆவணங்கள், “மிடில் ஈஸ்ட் ஸ்பெக்டேட்டர்” என்ற கணக்கு மூலம் டெலிகிராமில் வெளியானதும் இணைய தளங்களில் பரவத் தொடங்கியுள்ளன.
ஈரானுக்கு எதிரான தாக்குதலுக்கு இஸ்ரேல் மேற்கொண்டு வருவதாகக் கருதப்படும் ஏற்பாடுகளை அந்த ஆவணங்கள் உள்ளடக்கியுள்ளன. அவற்றில் நெஷனல் ஜியோ ஸ்பேஷியல்-இன்டலிஜென்ஸ் ஏஜென்சியால் தொகுக்கப்பட்டதாகக் கூறப்படும் ஆவணமும் ஒன்று, இதில் இஸ்ரேல் ஆயுதங்களை நகர்த்தும் திட்டங்களும் உள்ளடங்கியுள்ளது என்றும் கூறப்பட்டிருக்கிறது.
மற்றொரு ஆவணம், தேசிய பாதுகாப்பு நிறுவனத்திடம் இருந்து பெறப்பட்டதாகவும், ஈரான் மீதான தாக்குதலுக்கான தயாரிப்பாக நம்பப்படும் வான்வெளி ஏவுகணைகளை உள்ளடக்கிய இஸ்ரேலிய விமானப்படை பயிற்சிகளையும் சுட்டிக்காட்டியுள்ளது.
இதனால் இஸ்ரேலும், அமெரிக்காவும் அதிர்ச்சியடைந்துள்ளதோடு, இந்த ஆவணங்கள் எவ்வாறு பகிரங்கமாகின? அவை ஹேக் செய்யப்பட்டதா அல்லது வேண்டுமென்றே கசிந்தனவா என்பது தொடர்பில் மெரிக்கா விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.