ஈரான் இன்று இஸ்ரேல் மீது நூற்றுக்கும் மேற்பட்ட ஏவுகணை தாக்குதல்களை நடாத்தியுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இத்தாக்குதலில் இஸ்ரேலின் விமான படைத்தளம் ஒன்று தாக்கப்பட்டதாகவும், அதில் தரித்து நின்ற சுமார் 20 போர் விமானங்கள் சேதமாக்கப்பட்டும், அழிக்கப்பட்டும் உள்ளதாகவும் கூறியுள்ள ஈரான், இஸ்ரேலின் அணுஆயுத பரிசோதனை நிலையம் உட்பட இஸ்ரேலின் தலைநகரின் பல பாகங்களிலும் தங்கள் ஏவுகணைகள் வீழ்ந்து வெடித்துள்ளதாகவும் கூறியுள்ளது.
இதேவேளை இத் தாக்குதல் தம்மை அச்சுறுத்தும் விதமாக இஸ்ரேல் நாந்துகொண்டமைக்கும், ஹிஸ்புல்லா தலைவரை படுகொலை செய்தமைக்கும் பதிலடியாகவும், பழிவாங்கும் தாக்குதலாகவுமே தாம் தற்போது நடாத்தியுள்ளதாகவும், இனியும் இஸ்ரேல் ஈரான் மீது தாக்குதல் நடாத்தினால் அதைவிட ஆயிரம் மடங்கு அதிகமான தாக்குதலை தாம் இஸ்ரேல் மீது நடாத்துவோம் எனவும் எச்சரித்த்துள்ளது.