இளையோருக்கான ஐ.சி.சி. உலகக் கிண்ணத் தொடர் இன்று ஆரம்பம் !

19 வயதுக்குட்பட்ட ஆடவருக்கான ஐ.சி.சி. உலகக் கிண்ண தொடர் இன்று வியாழக்கிழமை தென்னாப்பிரிக்காவில் ஆரம்பமாகின்றது.

தென்னாப்பிரிக்காவில் நடைபெறுகின்ற இத்தொடரின் முதல் போட்டியில் குழு A பிரிவில் அயர்லாந்து மற்றும் அமெரிக்க அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.

கடந்த 2020 ஆம் ஆண்டு இரு அணிகளும் பலப்பரீட்சை நடத்திய நிலையில் அதில் அயர்லாந்து அணி 5 விக்கெட்களால் வெற்றிபெற்றிருந்தது.

இதேநேரம் மற்றுமொரு போட்டியில் குழு B பிரிவில் இருந்து தென்னாபிரிக்கா மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன.

இரு அணிகளும் 2020 ஆம் ஆண்டு முதல் 5 போட்டிகளில் விளையாடியுள்ள நிலையில் அதில் 3 போட்டிகளில் மேற்கிந்திய தீவுகள் அணியும் 2 போட்டிகளில் தென்னாபிரிக்க அணியும் வெற்றியீட்டியுள்ளன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *