சிறந்த தரத்திலான கல்வியை பெற்றுக் கொடுப்பதற்கு அரசாங்கத்தினால் முடியாமல் போயுள்ளமையால் மாற்று வழிமுறைகளுக்கு செல்ல வேண்டாம் என்று தடை செய்ய முடியாது. மாணவத் தலைமுறைக்கு கல்வியை பெற்றுக்கொள்வதற்கான சந்தர்ப்பத்தை பலப்படுத்த வேண்டும். இலவசக் கல்வி முறையை பலப்படுத்துவதோடு மாற்றுக் கருவிகளுக்கான சந்தர்ப்பத்தையும் பலப்படுத்த வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
கொழும்பில் புதன்கிழமை (11) நடைபெற்ற ஐக்கிய மக்கள் சக்தியின் தொழில் ரீதியான போதனையாளர்களின் மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே எதிர்க்கட்சித் தலைவர் பிரேமதாச இவ்வாறு தெரிவித்தார்.
தொழில் ரீதியான போதனையாளர்களின் தொழில் செயற்பாடுகளின்போது அறிவை வளர்த்துக்கொள்வதா அல்லது குறைத்துக்கொள்வதா என்பது குறித்து சிந்திக்க வேண்டும். அறிவை மையமாகக் கொண்ட பொருளாதார மேம்பாட்டின்போது அவர்களுடைய பங்களிப்பு பயனுள்ளதாக அமையும் என எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.