இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் இரண்டு நாள் விஜயத்தை மேற்கொண்டு எதிர்வரும் செப்டம்பர் மாதம் 02ஆம் திகதி இலங்கை வரவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
சீனாவின் ஆய்வுக் கப்பலின் வரு கையை அனுமதிக்குமாறு அந்நாடு முன்வைத்துள்ள கோரிக்கையை இலங்கை வெளியுறவுத்துறை அமைச்சு பரிசீலித்து வரும் இவ்வேளையில் இந்த விஜயம் மிக முக்கியத்துவம் வாய்ந்ததாக அமையுமென எதிர்பார்க்கப்படுகிறது.
இலங்கை வரும் இந்திய பாதுகாப்பு அமைச்சர் திருகோணமலைக்கு விஜயம் செய்யவுள்ளார் என்றும் மேலும் தெரியவந்துள்ளது.