2023 ஆசிய கிண்ண கிரிக்கெட் தொடரின் சூப்பர் 4 சுற்றின் இரண்டாவது போட்டி இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையில் தற்சமயம் இடம்பெற்று வருகிறது.
போட்டியில் நாணய சுழற்சியில் பங்களாதேஷ் அணி வெற்றிப் பெற்று முதலில் துடுப்பெடுத்தாட இலங்கை அணிக்கு அழைப்பு விடுத்தது.
இதன்படி, கொழும்பு ஆர் பிரேமதாச சர்வதேச மைதானத்தில் இடம்பெற்றுவரும் இந்த போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 50 ஓவர்கள் நிறைவில் 9 விக்கெட்டுக்களை இழந்து 257 ஓட்டங்களை பெற்றது.
இலங்கை அணி சார்பில் அதிரடியாக ஆடிய சதீர சமரவிக்ரம 93 ஓட்டங்களை பெற்றதுடன் குசல் மெண்டிஸ் 50 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார்.
பங்களாதேஷ் அணி சார்பில் பந்து வீச்சில் Hasan Mahmud 3 விக்கெட்டுக்களை வீழ்த்தினார்.
இதன்படி பங்களாதேஷ் அணிக்கு 258 ஓட்டங்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.
பின்னர் 258 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ் அணி 48.1 ஓவர்கள் நிறைவில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 236 ஓட்டங்களை பெற்று தோல்வியை தழுவியது.
அந்த அணி சார்பில் Towhid Hridoy அதிகபடியாக 82 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார்.
இலங்கை அணி சார்பில் பந்து வீச்சில் Maheesh Theekshana, Dasun Shanaka, Matheesha Pathirana ஆகியோர் தலா 3விக்கெட்டுக்களை வீழ்த்தினர்.