இலங்கையில் நாளை மறுதினம் (நவம்பர் 14) நடைபெறவுள்ல தேர்தலில் போட்டியிடும் இலங்கை தமிழரசு கட்சி வேட்பாளர்களுக்கு தாம் ஆதரவு வழங்கவில்லை என அக் கட்சியின் பிரித்தானிய கிளை அறிவித்துள்ளது.
நீண்ட காலமாக நன் மதிப்பையும், பேராதரவையும் பெற்றிருந்த இலங்கை தமிழரசு கட்சி தற்போது ஆ.சுமந்திரன், ப.சத்தியலிங்கம் மற்றும் இ.சாணக்கியன் ஆகியோரது தன்னிச்சையான முடிவுகளாலும், செயற்பாடுகளாலும் பல ஒதுக்கப்பட்டு கட்சி சிதைக்கப்பட்டு கட்சியின் நீண்டகால உறுப்பினர்கள் ஒதுங்கியும், கட்சியை விட்டே விலகியும் செல்லும் நிலை உருவாகியுள்ள இச் சூழலில் கட்சியின் கீழ்மட்ட உறுப்பினர்கள் மத்தியிலும், ஆதரவாளர்கள் மத்தியிலும், ஏன் தமிழ் மக்கள் மத்தியிலும் பெரும் அதிர்ப்தியையும், விசனத்தையும் ஏற்படுத்தியுள்ல இச் சூழலிலேயே நாமும் இம் முடிவை எடுத்துள்ளோம் என பிரித்தானிய கிளை குறிப்பிட்டுள்ளது.
மேலும், தந்தை செல்வாவினால் கட்டமைக்கப்பட்ட இலங்கை தமிழரசு கட்சியின் எதிர்காலமே கேள்விக்குறியாகியுள்ல நிலையில், அதற்கு காரணமான ஆ.சுமந்திரன், ப.சத்தியலிங்கம், இ.சாணக்கியன் உட்பட்ட அனைவர் மீதும் பாரபட்சமின்றி ஒழுக்காற்று நடவடிக்கையை கட்சித் தலைமை மேற்கொள்ள வேண்டும் எனவும் கேட்டுக்கொள்வதாக அவ் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.