இலங்கையில் எலிக்காச்சல் நோய் பரவலால் மக்கள் அச்சத்தில் உறைந்துள்ளனர். கடந்த 5 மாதங்களில் மட்டும் குறித்த எலிக்காச்சல் நோயால் 4904 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இலங்கையில் குறித்த நோய் காரணமாக பதிவாகும் நோயாளர்களில் பெருமளவானோர் நெற் பயிர்செய்கையில் ஈடுபடும் விவசாயிகளாகவோ அல்லது அதனை அண்மித்த தொழில்புரிபவர்களாகவோ உள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது.
இதனை அடிப்படையாக கொண்டு வருடத்தில் இரண்டு அல்லது இரண்டுக்கு மேற்பட்ட சந்தர்ப்பங்களில் விவசாய நடவடிக்கைகளில் அதாவது அறுவடையில் ஈடுபடுபவர்கள் தமது சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவில் எலிக்காய்ச்சல் தடுப்பு மருந்தினைப் பெற்றுக் கொள்ள முடியும் என விசேட வைத்திய நிபுணர் துஷானி டி பெரேரா தெரிவித்தார்.