இலங்கையுடனான உறவில் எந்தவித வரம்புகளும் இல்லை : ஈரானிய ஜனாதிபதி!

ஈரான் ஜனாதிபதி, இப்ராஹிம் ரைசி நேற்று காலை வருகை தந்து உமாஓயா பல்நோக்கு அபிவிருத்தி திட்டத்தை திறந்து வைக்கும் நிகழ்வில் கலந்துகொண்டதோடு, இலங்கை மற்றும் ஈரான் இடையில் 5 புதிய உடன்படிக்கைகள் கைச்சாத்திட்டார்.

இதன்போது, இலங்கை தேசிய நூலகம், ஈரான் தேசிய நூலகம் மற்றும் ஆவணக்காப்பகம் ஆகியவற்றுக்கு இடையில் ஒத்துழைப்பு ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது.

தேசிய திரைப்படக் கூட்டுத்தாபனம் மற்றும் ஈரானின் கலாசார இஸ்லாமிய வழிகாட்டல் அமைச்சுக்கு இடையே திரைப்படத் துறையின் ஒத்துழைப்பு தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தமும் கையெழுத்தானது.

ஊடகம் மற்றும் சுற்றுலாத் துறைகளுக்கான ஒப்பந்தங்களும் இருநாடுகளுக்கும் இடையே கையெழுத்திடப்பட்டது.

இதனைத்தொடர்ந்து ஈரான் மற்றும் இலங்கை ஜனாதிபதிகள் இணைந்து கொழும்பில் ஊடக சந்திப்பை நடத்தினர்.

இலங்கை மற்றும் ஈரான் இடையிலான அரசியல், பொருளாதாரம், வர்த்தகம் மற்றும் கலாசார தொடர்புகளை விரிவுபடுத்துவதில் எந்தவித வரம்புகளும் கட்டுப்பாடுகளும் இல்லையென ஈரான் ஜனாதிபதி இதன்போது தெரிவித்திருந்தார்.

இலங்கைக்கான உத்தியோகபூர்வ விஜயத்தை நிறைவு செய்து ஈரான் ஜனாதிபதி, இப்ராஹிம் ரைசி நேற்றிரவு நாட்டிலிருந்து புறப்பட்டுச் சென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *