இலங்கையில் யுத்தம் முடிவடைந்து 15 வருடங்கள் ஆகியும் யுத்த குற்றங்களிற்கு இன்னமும் நீதிவழங்கப்படவில்லை:

தமிழீழ விடுதலைப்புலிகளிற்கும் இலங்கை அரசாங்கத்திற்கும் இடையிலான 26 வருட கால யுத்தம் இறுதியாக மே 19 ம் திகதி முடிவிற்கு வந்தது சிரேஸ்ட தலைவர்கள் உட்பட நூற்றுக்கும் மேற்பட்ட விடுதலைப்புலிகள் சரணடைந்தவேளை படுகொலை செய்யப்பட்டதாக குற்றம்சாட்டப்படுகின்றது.

மோதலின் இறுதி யுத்தத்தில் இரு தரப்பினரும் இழைத்த போர்க்குற்றங்களில் இதுவும் ஒன்று.

தங்கள் வெற்றிக்கேடயங்களாக அரசபடையினர் வைத்திருந்த புகைப்படங்களும் வீடியோக்களும் கைகள் பி;ன்னால் பிணைக்கப்பட்ட கைதிகள் படுகொலை செய்யப்படுவதை காண்பி;த்துள்ளன.

பெருமளவு பெண்பேராளிகள் நிர்வாணமாக படம்பிடிக்கப்பட்டனர் பாலியல் வன்முறைக்குபின்னர் கொலைசெய்யப்பட்டனர்.

அரசபடையினரின் சித்திரவதைகள் சட்டத்திற்கு புறம்பான படுகொலைகள் பலவந்தமாக காணாமல்செய்யப்படுதல்  கண்மூடித்தனமான தாக்குதல் போன்ற அட்டுழியங்களிற்கு இன்னமும் பொறுப்புக்கூறல் இடம்பெறவில்லை.

விடுதலைப்புலிகளின் தலைமைத்துவத்தை சேர்ந்தவர்கள் போர்களத்தில் மரணித்துள்ளனர் அல்லது படுகொலை செய்யப்பட்டுள்ளனர் இதன் காரணமாக அவர்களை பொறுப்புக்கூறலிற்கு உட்படுத்த முடியாது.

ஒரு தசாப்தகால மோதலில் ஒரு இலட்சத்திற்கும் அதிகமான படையினர் உயிரிழந்துள்ளனர் மோதலின் இறுதி மாதங்களில் 40இ000க்கும் அதிகமான படையினர் கொல்லப்பட்டனர் என ஐநாவின் அறிக்கையொன்று தெரிவிக்கின்றது.

அந்த காலப்பகுதியில் வன்னியில் இயங்கிய அனைத்து மருத்துவமனைகளும் தற்காலிக – நிரந்தரமருத்துவமனைகள் – குண்டுவீச்சிற்குள்ளாகின என ஐநாவின் அறிக்கை கண்டறிந்துள்ளது.

மனிதாபிமான உதவிகளை மட்டுப்படுத்துவதற்காக அரசாங்கம் மோதல் இடம்பெற்ற பகுதிகளில் உள்ள பொதுமக்களின் எண்ணிக்கையை குறைத்துகாண்பித்தது.

பால்மாவை பெறுவதற்காக ஏப்பிரல் 8 2009ம் ஆண்டு வரிசையில் நின்றுகொண்டிருந்த பெண்களும் சிறுவர்களும் குழந்தைகளும் எறிகணைவீச்சில்  கொல்லப்பட்டனர் என்பது நன்கு பதிவாகியுள்ளது.

தீர்வு காணப்படாத போரின் பாரம்பரியம் இலங்கைக்கு துஸ்பிரயோகம்இ தண்டனையிலிருந்து விலக்களிக்கப்படுதல்இ தவறான ஆட்சி போன்றவற்றை ஒரு மரபாக கையளித்துள்ளதுஇஇது நாட்டிற்கு தொடர்ந்தும் பாதிப்பை ஏற்படுத்திவருவதுடன் தற்போது நாடு எதிர்கொள்ளும் பொருளாதாரநெருக்கடிக்கும் காரணமாக உள்ளன.

இதேவேளை அநீதிகள் தொடர்பில் குற்றம்சாட்டப்பட்ட சிரேஸ்ட அதிகாரிகள் பதவி உயர்த்தப்பட்டுள்ளனர் தற்போதைய பாதுகாப்பு செயலாளர் கமால் குணரட்ண இறுதிதாக்குதலின் போது முக்கிய தளபதிகளில் ஒருவராக காணப்பட்டார்.

மிகமோசமான மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுகள் காரணமாக அவர் அமெரிக்காவிற்கு பயணம் மேற்கொள்வதை அமெரிக்கா தடுத்துள்ளது.

இலங்கையில் தமிழர்கள் அதிகமாக வாழும் மோதல்கள் இடம்பெற்ற வடக்குகிழக்கில் – நெடுஞ்சாலைகளி;ல்இன்னமும் அதிகளவில் இராணுவமுகாம்களும் சோதனைசாவடிகளும் காணப்படுகின்றன.

சமூக ஊடக பதிவுகளுக்காகவும் யுத்தத்தில் உயிரிழந்த தமிழர்களை நினைவுகூர்ந்தமைக்காகவும் பயங்கரவாத தடைச்சட்டத்தி;ன் கீழ் கைதுசெய்யப்படுதல் தொடர்கின்றது.

பல்வேறு விதமான காரணங்களை முன்வைத்து அரசஅமைப்புகள் தமிழர்கள் முஸ்லீம்களின் நிலங்களை கைப்பற்றி சிங்கள பௌத்த பெரும்பான்மை சமூகங்களை சேர்ந்தவர்களை குடியேற்றுகின்றனர்.இந்து ஆலயங்கள் உள்ள பகுதிகளில் பௌத்த தூபிகள் போன்றவற்றை அமைக்கின்றனர்.

இந்த பயங்கரமான பாரம்பரியத்திற்கு தீர்வை காண்பதற்கான ஒரு சில வழிகளில் ஒன்று ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையாகும்.

இது எதிர்காலத்தில் வெளிநாடுகளில் இடம்பெறக்கூடிய  விசாரணைகளிற்காக இலங்கையில் இடம்பெற்ற பாரிய மனித உரிமைமீறல்கள் அநீதிகள் குறித்த ஆதாரங்களை சேகரிப்பதற்கு பாதுகாப்பதற்கு ஐநா அலுவலகமொன்றை உருவாக்கியுள்ளது.

இலங்கையில் இடம்பெற்ற யுத்த குற்றங்கள் குறித்து விசாரணைகளை மேற்கொள்வதற்கு உலக நாடுகள் இந்த அலுவலகத்துடன் இணைந்து செயற்படவேண்டும் – செப்டம்பரில்ஐநாவின் இந்த அலுவலகத்தை தொடர்ந்தும் இயங்கச்செய்வதற்காக ஆணையை வழங்கவேண்டும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *