இலங்கையில் தொடர்ந்தும் பாதுகாப்பற்ற நிலையில் தமிழர்கள் – அவுஸ்திரேலிய செனெட்டர்

இலங்கையில் கொடிய யுத்தம் முடிவடைந்து 15 ஆண்டுகள் கடந்துள்ள போதும் இன்றும் இலங்கையில் பாதுகாப்பு அற்ற நிலையிலேயே தமிழர்கள் உள்ளனர் என அவுஸ்திரேலிய கிறீன்ஸ் கட்சியின் செனெட்டர் தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்…

பாதுகாப்பு வலயம் என அறிவிக்கப்பட்ட பிரதேசத்தில் செஞ்சிலுவை சங்கத்தின் கீழ் இருந்த ஆயிரக்கணக்கான மக்கள் உட்பட 170,000 க்கும் மேற்பட்ட மக்கள் போரில் கொன்று குவிக்கப்பட்டனர்.

இந்த குற்றங்களிற்கு காரணமானவர்கள் இன்றும் இலங்கை இராணுவத்திலும், அரசாங்கத்திலும் உயர் பதவிகளில் அமத்தப்பட்டு தொடர்ந்தும் நீடிக்கின்றனர்.

இதன் காரணமாக இன்றுவரை தமிழர்கள் பாதுகாப்பற்ற நிலையிலேயே இலங்கையில் உள்ளனர். ஒடுக்குமுறையை எதிர்கொள்கின்றனர்.

பலர் அவுஸ்திரேலியாஉட்பட பல நாடுகளில் தஞ்சம் புகுந்துள்ளனர்.

எங்கள் தேசம் தனதுஇதயத்தை அவர்களிற்காக திறக்கவேண்டும் அவர்களிற்கு நிரந்தர பாதுகாப்பை வழங்கவேண்டும். என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *