கடந்த வருடத்தை விட இலங்கையில் எச்.ஐ.வி தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக வைத்தியர் ஜானகி விதானபத்திரன தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
20 முதல் 30 வயதுக்குட்பட்டவர்களே இந்த நோயினால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் கூறியுள்ளார். .