ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற்ற அனுரகுமார திசநாயக்கவிற்கு அமெரிக்கா வாழ்த்துக்களை தெரிவிப்பதாக இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சங் தெரிவித்துள்ளார்.
தங்கள் ஜனநாயக உரிமைகளை அமைதியான முறையில் பயன்படுத்தியமைக்காக இலங்கை மக்களை பாராட்டுகின்றோம் என அவர் தெரிவித்துள்ளார்.
பகிரப்பட்ட முன்னுரிமைகளின் அடிப்படையில் இணைந்து செயற்பட தாம் தயார் என அவர் தெரிவித்துள்ளார்.