இலங்கையின் கட்டமைப்பான இனவழிப்பும் தமிழ் மக்களின் இன சுத்திகரிப்பும்(“Structural Genocide and Ethnic Cleansing of Tamils in Sri Lanka”) என்ற நூல் யாழ்ப்பாணத்தில் தமிழ் மக்கள் கூட்டணியினரால் வெளியிட்டு வைக்கப்பட்டது.
கோவில் வீதி நல்லூரில் உள்ள கட்சியின் அலுவலகத்தில் இன்று சனிக்கிழமை மாலை நூல் வெளியிடப்பட்டது.
இதன்போது தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளர் நாயகமும் பாராளுமன்ற உறுப்பினருமானக.வி.விக்னேஸ்வரன் உள்ளிட்ட கட்சியின் உறுப்பினர்கள், அரசியல் பிரமுகர்கள் ஆர்வலர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.