இலங்கைக்கான புதிய இந்திய உயர்ஸ்தானிகராக சந்தோஷ் ஜா நியமனம்:

இலங்கைக்கான புதிய இந்திய உயர்ஸ்தானிகராக சிரேஷ்ட இராஜதந்திரியான சந்தோஷ் ஜா (Santosh Jha ) தனது கடமைகளை நேற்றைய தினம் பொறுப்பேற்றுக்கொண்டார்.

ஶ்ரீ சந்தோஷ் ஜா இதற்கு முன்னர் பெல்ஜியத்திற்கான இந்திய தூதுவராக கடமையாற்றியுள்ளார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை இந்திய உயர்ஸ்தானிகராக கடமையாற்றிய கோபால் பாக்லே, அவுஸ்திரேலியாவிற்கான இந்திய உயர்ஸ்தானிகராக நியமிக்கப்பட்டுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *