புலம்பெயர் உறவுகள் மற்றும் கலைஞர்களின் ஆதரவுடன் புனரமைக்கப்பட்ட நல்லூர் இளங்கலைஞர் மன்றத்தின் புனரமைக்கப்பட்ட கட்டிடத் திறப்பு விழா இன்று சனிக்கிழமை (25) நடைபெற்றது.
இளங்கலைஞர் மன்றத் தலைவரும் வடக்கு மாகாண அவைத்தலைவருமான சீ.வீ.கே. சிவஞானம் தலைமையில் நடை பெற்ற இந்நிகழ்வில் பிரதம விருந்தின ராக வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் கலந்து கொண்டு திறந்துவைத்தார்.
கௌரவ விருந்தினர்களாக சிவபூமி அறக்கட் டளைத் தலைவரும் மன்றக் காப்பாளருமான செஞ்சொற் செல்வர் ஆறு திருமுருகனும் ஈழத்தின் சிரேஷ்ட இசையமைப்பாளர் இசைவாணர் கண்ணனும் கலந்துகொண்டணர்.
இன்று சனிக்கிழமை (25) முதல் திங்கட்கிழமை (27) வரை காலை மாலை நிகழ்வுகளாக நடைபெறவுள்ள இந்நிகழ்வில் விசேட தவில் நாதஸ்வரக் கச்சேரி, இசையரங்கு, இசைக்கச்சேரி, நடனம், நாடகம் பட்டி மன்றம் போன்ற பல்வேறு கலை நிகழ்வுகளும் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.


