இன்று (25) ஜனாதிபதி தலைமையில் முக்கிய அமைச்சரவை கூட்டம்:

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில் இன்று திங்கட்கிழமை பிற்பகல் முக்கிய அமைச்சரவை கூட்டம் நடைபெறவுள்ளது.

சர்வதேச நாணய நிதியத்துடன் கைச்சாத்திட்ட கடனின் இரண்டாம் தவணையை பெற்றுக்கொள்ள அரசாங்கம் நடவடிக்கை எடுத்துவரும் நிலையில் ஜனாதிபதி செயலகத்தில் இந்த சந்திப்பு நடைபெறவுள்ளது.

இந்த ஒப்பந்தங்கள் தொடர்பான விவரங்கள் இன்றைய அமைச்சரவைக் கூட்டத்தின் போது விவாதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஐக்கிய நாடுகளின் பொதுச் சபைக் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக ஜனாதிபதி அமெரிக்கா சென்றிருந்த காரணத்தினால் வாராந்திர அமைச்சரவைக் கூட்டம் கடந்த வாரம் நடைபெறவில்லை.

இந்நிலையில் இன்று நடைபெறும் கூட்டத்தில் அமெரிக்க விஜயத்தின் போது எட்டப்பட்ட கலந்துரையாடல்கள் மற்றும் உடன்படிக்கைகள் குறித்து ஜனாதிபதி இன்று அமைச்சரவையில் விளக்கமளிக்கவுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *