இந்திய கடற்படையில் இணையும் அதி நவீன போர் கப்பல்!

இந்தியாவின் புதிய தமல் போர்க்கப்பல் அதிநவீன உபகரணங்களுடன் கடற்படையில் பணிக்கு தயாரக உள்ளது.

இந்திய கடற்படையின் புதிய பல்துறை ஸ்டெல்த் போர்க்கப்பல் ஐஎன்எஸ் தமல் (INS Tamal), ரஷ்யாவின் கலினிங்ராடில் விரைவில் இந்திய-ரஷ்ய பாதுகாப்பு அதிகாரிகளின் முன்னிலையில் சேவையில் இணைக்கப்பட உள்ளது.

‘தமல்’ என்பது கிரிவாக் வகை கப்பல்களில் எட்டாவது மற்றும் டுஷில் வகையின் இரண்டாவது கப்பலாகும்.

இதை ரஷ்யாவின் யண்டார் ஷிப்யார்டில் இந்திய கடற்படையின் ஆய்வுப் பிரிவினரின் நேரடி கண்காணிப்பில் கட்டப்பட்டுள்ளது.

இது ‘Make In India’ மற்றும் ‘ஆத்மநிர்பர் பாரத்’ திட்டத்தின் அடையாளமாகும், ஏனெனில் இதில் 26 சதவீதம் உள்நாட்டுக் கூறுகள் பயன்படுத்தப்பட்டுள்ளன.

பிரம்மோஸ் சூப்பர்சோனிக் ஏவுகணை, மேம்பட்ட 100 மிமீ துப்பாக்கி, பசுமை திறன் கொண்ட வேகமான சாமர்த்தியங்கள், நவீன EO/IR கண்காணிப்பு அமைப்புகள், மற்றும் அதிரடி நீர்மூழ்கிக் கப்பல் எதிர்ப்பு ஆயுதங்கள் உள்ளிட்ட பல்வேறு உச்சநிலை ஆயுதங்கள் இதில் உள்ளன.

125 மீட்டர் நீளமும் 3,900 டன் எடையும் கொண்ட இந்த போர்க்கப்பல், 30 knots-ஐ தாண்டும் வேகத்தில் செல்லும் திறன் பெற்றது.

250-க்கும் மேற்பட்ட வீரர்கள் கொண்ட படையணி, கடுமையான பரீட்சார்த்த பயிற்சியில் கலிந்தாகிராட் மற்றும் சென்ட் பீட்டர்ஸ்பர்க் பகுதியில் பயிற்சி பெற்றுள்ளனர்.

தமல், மேற்குக் கடற்படைக்குழுவில் (Western Fleet) இணைந்து, இந்திய கடற்படையின் புதிய சாமர்த்தியங்களை உலகிற்கு காட்டும் சக்தியாக விளங்கும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *