இந்தியாவிலிருந்து இங்கிலாந்து சென்ற பயணிகள் விமானம் விபத்து – 50 ற்கு மேற்பட்டோர் பலி!

இந்தியாவின் – அஹமடாபாத் விமான நிலையத்திலிருந்து 242 பயணிகளுடன் இங்கிலாந்து – கற்விக் விமான நிலையம் நோக்கி பயணமான விமானம் திடீரென வீழ்ந்து விபத்துக்குள்ளானதில் 50 ற்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர்.

போயிங் 787 ரக குறித்த விமானம் அஹமடாபாத் விமான நிலையத்தில் இருந்து புறப்பட்டு சில நிமிடங்களுக்குள்ளேயே 625 அடி உயரத்தில் இருந்து வீழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.

இன்று (12) வியாழக்கிழமை பிற்பகல் 1:43 மணிக்கு இடம்பெற்ற குறித்த விபத்தில் இதுவரை 50 பயணிகளின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இன்னும் மீட்பு பணிகள் தொடர்ந்து இடம்பெற்று வருவதால் பலியானோர் எண்ணிக்கை மேலும் அதிகரிக்க வாய்ப்புக்கள் உள்ளதாக கூறப்படுகிறது.

மேலும், குறித்த 242 பயணிகளில் 53 பேர் பிட்டனை சேர்ந்தவர்கள் எனவும், 7 குழந்தைகளும் பயணித்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *