இந்திய – இலங்கை நட்பை வெளிப்படுத்தும் முகமாக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவினால் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு, இலங்கையின் மித்ர விபூஷன் விருது வழங்கி கௌரவித்துள்ளார்.
இதனையடுத்து, உரையாற்றிய மோடி, மித்ர விபூஷன் விருது எனக்கு மட்டும் கிடைத்த கெளரவம் அல்ல எனவும் மாறாக 140 கோடி இந்தியர்களுக்கு கிடைத்த கெளரவம் எனவும் தெரிவித்துள்ளார்.
இது இலங்கைக்கும் இந்திய மக்களுக்கும் இடையிலான வரலாற்று உறவையும் ஆழமான நட்பையும் காட்டுகிறது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.