நேற்றைய (08) தினம் வரை 17 அரசியல் கட்சிகளும் 16 சுயேச்சைக் குழுக்களும் பொதுத் தேர்தலுக்காக வேட்புமனு தாக்கல் செய்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
அதேவேளை, மாத்தளை, காலி, மாத்தறை, குருநாகல் மற்றும் பதுளை ஆகிய மாவட்டங்களின் தேர்தல் தொகுதிகளில் நேற்று வரை எந்த அரசியல் கட்சியோ அல்லது சுயேச்சைக் குழுவோ வேட்புமனுக்களை சமர்ப்பிக்கவில்லை எனவும் தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
பொதுத் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் ஒக்டோபர் 4ஆம் திகதி ஆரம்பமாகி 11ஆம் திகதி நண்பகல் 12.00 மணி வரை நிறைவடையவுள்ளமை குறிப்பிடத்தக்கது.