ஆப்கானிஸ்தானின் மேற்குப் பகுதியில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் 1,000க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது.
மேலும் நூற்றுக்கணக்கானோர் காயமடைந்துள்ளனர். ஐ.நா. மற்றும் பிற அமைப்புக்கள் அவசரகால உதவிகளை வழங்கத் தொடங்கியுள்ளன.
சனிக்கிழமை ஏற்பட்ட 6.3 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்தால் ஏற்பட்ட இடிபாடுகளில் இருந்து மக்களை மீட்கும் பணியில் ஆப்கானிஸ்தானின் அவசரக் குழுக்கள் ஈடுபட்டுள்ளன.
தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்டு, பல சாலைகள் அடைக்கப்பட்டதால், மீட்புப் பணியாளர்கள் தொலைதூரப் பகுதிகளுக்குச் செல்ல முடியாமல் திணறி வருகின்றனர்.