ஆதிலிங்கேஸ்வரர் ஆலய விவகாரம்: வழங்கப்பட்ட கட்டளையின் பிரகாரம் செயற்படுமாறு உத்தரவு!

வவுனியா, வெடுக்குநாறிமலை ஆதிலிங்கேஸ்வரர் ஆலய விடயத்தில் நீதிமன்றம் வழங்கியுள்ள கட்டளையின்படி செயற்படுமாறு குறித்த ஆலய நிர்வாகத்திற்கு வவுனியா நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மகாசிவராத்திரி தினத்தை முன்னிட்டு எதிர்வரும் 8 ஆம் திகதி வவுனியா, வெடுக்குநாறிமலை ஆதிலிங்கேஸ்வரர் ஆலயத்தில் விசேட பூஜை வழிபாடுகளை மேற்கொள்வதற்கு ஆலயநிர்வாகத்தினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

எனினும், மின்பிறப்பாக்கி இயந்திரங்களை பயன்படுத்தி நிகழ்வுகளை நடத்தமுற்பட்டால் அதற்கு நீதிமன்றில் அனுமதி பெறப்படவேண்டும் என்று நெடுங்கேணி பொலிஸாரால் ஆலயநிர்வாகத்திற்கு தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதனையடுத்து வவுனியா நீதிமன்றில், ஆலயநிர்வாகம் சார்பாக கடந்தவாரம் நகர்த்தல் பத்திரம் தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

இது தொடர்பான விசாரணைகள் நேற்று மன்றில் இடம்பெற்றபோது, ஏற்கனவே வழங்கப்பட்ட கட்டளையின் பிரகாரம் செயற்படுமாறு உத்தரவு பிறப்பித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *