கொழும்பில் நேற்றைய தினம் இடம்பெற்ற போராட்டத்தின் மீது பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட கண்ணீர்ப் புகை மற்றும் நீர்த்தாரை பிரயோகத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து ஆசிரியர் மற்றும் அதிபர்களின் தொழிற்சங்கங்கள் நாடளாவிய ரீதியில் இன்று (27) பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
இதன் காரணமாக பாடசாலைகளுக்கு மிக குறைந்த அளவிலான மாணவர்களே சமூகமளித்ததோடு அவர்களும் திரும்பி வீடுகளுக்கு சென்றமையை காணமுடிந்தது.