ஜனாதிபதித் தேர்தலில் வாக்களிக்க வசதியாக அரச மற்றும் தனியார் துறை ஊழியர்களுக்கு விசேட விடுமுறை வழங்கப்பட வேண்டும் என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
இதன்படி, முழு சம்பள விடுமுறையின் அடிப்படையில் ஊழியர்களுக்கு விடுமுறை வழங்க வேண்டும் என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
எதிர்வரும் 21ஆம் திகதி இலங்கையில் ஒன்பதாவது ஜனாதிபதி தேர்தல் இடம்பெறவுள்ள நிலையில் தேர்தல்கள் ஆணைக்குழு இந்த அறிவிப்பை வெளியிட்டிருக்கிறது.
அதற்கமைய; 40 கிலோமீட்டர் அல்லது அதற்கு குறைந்த தூரத்துக்கு அரை நாள் (1/2)விடுமுறையும்,
40 கிலோமீட்டருக்கும் 100 கிலோமீட்டருக்கும் இடைப்பட்ட தூரத்துக்கு ஒரு நாள் (1) விடுமுறையும்,
100 கிலோமீட்டருக்கும் 150 கிலோமீட்டருக்கும் இடைப்பட்ட தூரத்துக்கு ஒன்றரை (1-1/2) நாள் விடுமுறையும்,
150 கிலோமீட்டருக்கும் மேற்பட்ட தூரத்துக்கு இரண்டு நாட்கள் விடுமுறையும் வழங்குமாறும் தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.