2009 இன் பின்னர் மாவீரர் நாள் என்பது தமிழ் அரசியல்வாதிகளுக்கு தீனியாக மாறியுள்லதாக முனாள் போராளி குற்றம் சுமத்தியுள்ளார்.
குலசிங்கம் நவகுமார் (பாலன்) என்ற முன்னாள் போராளியே இந்த கருத்தை முன்வைத்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில்,
மாவீரர் நாளை வைத்து அரசியல் செய்ய முனையும் இப்போது உள்ள அரசியல்வாதிகள் எவரினதும் குடும்ப உறுப்பினர்கள் மாவீரர் ஆகவில்லை, போராளியாக இருந்ததில்லை, இறுதியுத்தத்தில் கொல்லப்படவும் இல்லை, ஏன் காணாமல் ஆக்கப்படவும் இல்லை.
இவ்வாறு தமிழர்களின் போராட்டம் இடம்பெற்ற இடத்தை விட்டு விலகி மண்மீதோ, மக்கள் உரிமை போராட்டம் மீதோ அக்கறையற்று ஒதுங்கி பாதுகாப்பாகவும் சுகபோக வாழ்க்கையும் வாழ்ந்த அரசியல்வாதிகளுக்கு மாவீரர்களை வைத்து அரசியல் செய்ய எந்த அருகதையும் இல்லை.
மாவீர நாள் நிகழ்வுகளை மாவீரர் குடும்பங்களும், முன்னாள் போராளிகளும், பொது மக்களும் நடாத்துவார்கள். அதற்குள் அரசியல் தலையீடுகள் தேவையற்றது. என்றார்.