அமைச்சர்கள் எவரும் பொதுச் சொத்தை விரும்பியபடி பயன்படுத்த முடியாது:

நாட்டில் அரசியல் கலாசாரத்தை மாற்றியமைப்பதே தேசிய மக்கள் சக்தியின் நம்பிக்கையென தெரிவித்துள்ள ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, அரசியலுக்கு ஏதாவது ஒரு தரநிலை இருக்கவேண்டுமென தெரிவித்துள்ளார்.

மொனராகலை பிரதேசத்தில் நடைபெற்ற மக்கள் சந்திப்பொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க இதனை தெரிவித்தார்.

இதன்போது மேலும் குறிப்பிட்ட அவர்,

நம் நாட்டுக்கு அரசியலில் ஒரு தரம் வேண்டும். அரசியல்வாதி நினைத்ததைச் செய்யலாமா? இல்லை. அதற்கு ஒரு அளவுகோல் இருக்கிறது.

அரசியல்வாதி ஒரு குறிப்பிட்ட கட்டமைப்பில் செயற்படவேண்டும். அரசியல்வாதி சட்டத்துக்குக் கீழ்ப்படிய வேண்டும். அரசியல்வாதி நாகரிகமான சட்டத்தில் இருக்கவேண்டும்.

பதிவு செய்யப்படாத வாகனங்கள், சுங்க வரியை முறையாக செலுத்தாமல் சுங்கச்சாவடியிலிருந்து ஓட்டிச் செல்லும் வாகனங்கள்,  சில வாகனங்களைப் பார்த்தால் அவை இங்கிலாந்தில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டவையாக இருக்கும். அதுதான் நம் நாட்டின் அரசியல் கலாசாரம்.

எனவே, சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்ற கருத்துக்கு உயிர் கொடுக்கின்றோம். நாம் அதை செய்கின்றோம்.

இந் நாட்டின் ஜனாதிபதியாக இருந்தாலும், அமைச்சராக இருந்தாலும் பொதுச் சொத்தை தத்தமது  விருப்பத்தின்படி பயன்படுத்த முடியாது. அப்படிப்பட்ட அரசியல் எமக்கு தேவையில்லை என அவர் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *