நாட்டில் தற்போது நடைமுறையில் இருக்கும் அமைச்சரவை இந்த வாரத்துக்குள் கலைக்கப்படுமென தேசிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பில் அவர் மேலும்,
அரசியலமைப்பினூடாக வழங்கப்பட்டுள்ள முதலாவது வாய்ப்புக்கு அமைய அமைச்சரவையை கலைப்போம். இந்த வாரத்துக்குள் அது இடம்பெறும் என்று கருதுகிறோம்.
அமைச்சு பொறுப்புக்கள் எவ்வாறு வழங்க படுகின்றன என்பதின் அடிப்படையில் புதிய பிரதமர் நியமனம் தொடர்பில் தீர்மானம் எடுக்கப்படும் என்று குறிப்பிட்டுள்ளார்.