ஒட்டுமொத்த உலக நாடுகளும் எதிர்பார்த்து கொண்டு இருக்கும் 47ஆவது அமெரிக்க ஜனாதிபதி தேர்தலின் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று கொண்டிருக்கும் நிலையில், தற்போதைய நிலவரப்படி குடியரசு கட்சியை சேர்ந்த டொனால்ட் ட்ரம்ப் முன்னிலையில் உள்ளார்.
இதுவரை வெளியாகியுள்ள தேர்தல் முடிவுகளின் படி, குடியரசு கட்சியை சேர்ந்த டொனால்ட் ட்ரம்ப் 248 இடங்களில் முன்னிலையில் உள்ள நிலையில், ஜனநாயக கட்சியை சேர்ந்த கமலா ஹாரிஸ் 194 இடங்களில் மட்டும் முன்னிலை பெற்றுள்ளார்.
மொத்தமுள்ள 50 மாகாணங்களில் 538 பிரதிநிதிகள் தேர்ந்தெடுக்கப்படும் நிலையில், அதில் பெரும்பான்மையாக 270 இற்கும்மேற்பட்ட பிரதிநிதிகளை பெறும் வேட்பாளர் அமெரிக்காவின் அடுத்த புதிய ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்படுவார் என்பது குறிப்பிடத்தக்கது.