இந்திய படைகளுக்கு எதிராக சாத்வீக முறையில் தன் உயிர் பிரியும் வரை உண்ணா நிலைப் போராட்டம் மேற்கொண்டு தியாக மரணமடைந்த தியாகி அன்னை பூபதி அவர்களின் நினைவு நாள் (ஏப்ரல் 19) இன்றாகும்.
இன்றைய நாளில் தாயக விடுதலைக்காக உயிர் நீத்த அன்னை பூபதியின் 37 ஆவது ஆண்டு நினைவேந்தல் யாழ். பல்கலைக்கழகத்தில் இடம்பெற்றது.
இதன்போது அன்னை பூபதியின் திருவுருப்படத்திற்கு சுடரேற்றி மலர்தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது. மேலும் அன்னை பூபதி தொடர்பான நினைவுரையும் இடம்பெற்றது.
பல்கலைக்கழக மாணவர்கள் பலரும் நினைவேந்தலில் கலந்துகொண்டு அஞ்சலிகளை செலுத்தினர்.
