அநுரவுடன் 6 நாடுகளின் தூதுவர்கள் திடீர் சந்திப்பு!

தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுர குமார திசாநாயக்கவுக்கும் ஆறு நாடுகளைச் சேர்ந்த தூதுவர்களுக்கும் இடையில் இன்று விசேட சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.

மக்கள் விடுதலை முன்னணியின் தலைமையகத்தில் இடம்பெற்ற இச்சந்திப்பில் பாலஸ்தீனத்தின் தூதுவர் கலாநிதி திரு. Zuhair M.H. Dar Zaid, துருக்கி குடியரசின் தூதுவர் திருமதி  R. Demet Sekercioglu, பங்களாதேஷ் குடியரசின் உயர்ஸ்தானிகர்  திரு. Tareq M.D. Ariful Islam, இந்தோனேசிய குடியரசின் தூதுவர் திருமதி  Dewi Gustina Tobing, மேற்படி தூதரகத்தின் பிரதம கொன்சல் திரு. Heru Prayitno, மலேசிய உயர்ஸ்தானிகர் திரு.  Badli Hisham Bin Adam  மற்றும் மாலைதீவு குடியரசின் பதில் தூதுவர் திருமதி Fathimath Ghina ஆகிய இராஜதந்திரிகள் கலந்து கொண்டிருந்தனர்.

இதன்போது  தேசிய மக்கள் சக்தியின் பிரதிநிதிகளால் தேசிய மக்கள் சக்தியின் கொள்கைகள் மற்றும் செயற்பாடுகள் பற்றி இராஜதந்திரிகளுக்கு  விழிப்புணர்வூட்டப்பட்டதோடு நாட்டின் அரசியல் மற்றும் பொருளாதார நிலைமைகள் குறித்தும் கலந்துரையாடப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *