பிரித்தானியா, அணு ஆயுதங்களை ஏற்றி செல்லக்கூடிய அமெரிக்காவில் தயாரிக்கப்பட்ட F-35A போர் விமானங்களை வாங்க இருப்பதாக பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் அறிவித்துள்ளார்.
குறைந்தது 12 விமானங்களை NATO அணியின் அணு தளவாடங்களுக்கான வான் பணிக்காக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
இந்த விமானங்கள் வழக்கமான குண்டுகள் மற்றும் ஏவுகணைகளை ஏற்றிச் செல்லக்கூடியவை தான். ஆனால் தேவையான சந்தர்ப்பங்களில், அமெரிக்க B61 அணு குண்டுகளையும் ஏற்றும் திறன் கொண்டவை.
இதன் மூலம், பிரித்தானியா தனது அணு பாதுகாப்பு நிலைப்பாட்டை பலப்படுத்தும் மிகப்பாரிய முயற்சியில் இறங்கியுள்ளது.
“அணு ஆயுதத்தை தயாரித்து விடும் என்ற அச்சத்தில் ஈரான் மீது அண்மையில் இஸ்ரேலும், அமெரிக்காவும் தாக்குதல் மேற்கொண்டது. அது உலக சமாதானத்திற்கானது எனவும் தெரிவித்திருந்தது. ஆனால் அணு ஆயுதங்களை ஏந்திச் சென்று தாக்குதல் நடாத்தக்கூடிய னவீன போர் விமானங்களை பிரித்தானியா வாங்குகிறது. இது எந்த வகையில் சரியானது என எந்த நாடும் கூறவில்லை”
F-35A வகை விமானங்கள், தற்போது பயன்படுத்தப்படும் F-35B-விட தொலைதூரம் பறக்கும் திறன் மற்றும் மேம்பட்ட ஆயுத ஏற்றும் வசதிகள் கொண்டவை.
F-35B விமானங்கள் கடற்படையின் கப்பல்களில் பறக்கக்கூடியவையாக இருந்தாலும், புதிய F-35A வகை விமானங்கள் இறக்குமதி பாதையிலேயே பறக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
இந்த முடிவு பிரித்தானியாவின் பாதுகாப்பு மேம்பாட்டு திட்டத்தின் ஒரு பகுதியாகவும், NATO கூட்டமைப்பின் அணுசக்தி ஒத்துழைப்பு திட்டத்திலும் முக்கிய இடம் பிடிக்கிறது. RAF Marham, Norfolk பகுதியில்தான் இந்த புதிய போர் விமானங்களின் தளம் அமையும்.
பாதுகாப்பை உறுதி செய்யும் இந்த முக்கிய முடிவின் மூலம், 20,000 வேலை வாய்ப்புகள் மற்றும் 100 நிறுவனங்களுக்கு மேலாக வாய்ப்பு உருவாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.