Home தாயக செய்திகள் 3 மாதங்களாக மூடப்பட்டிருந்த பாடசாலைகள் அனைத்தும் இன்று திறப்பு!

3 மாதங்களாக மூடப்பட்டிருந்த பாடசாலைகள் அனைத்தும் இன்று திறப்பு!

13
0

உலகையே அச்சுறுத்தி வந்த Covid-19 வைரஸ் தொற்று காரணமாக கடந்த மூன்று மாதங்களாக மூடப்பட்டிருந்த இலங்கையின் அனைத்து பாடசாலைகளும் இன்று மீள திறக்கப்பட்டுள்ளது.

இலங்கை அரசாங்கத்தின் பணிப்பின் பேரில் மீளத் திறக்கப்பட்டுள்ள பாடசாலைகளில் இன்று முதல் ஒரு வார காலத்திற்கு அதிபர்கள், ஆசிரியர்கள், பாடசாலை ஊழியர்கள் ஆகியோர் தற்போதைய சூழலுக்கேற்ப பாதுகாப்பாக மாணவர்களை பாடசாலைக்கு வந்துபோகச் செய்யும் தொற்று நீக்கல், மற்றும் வகுப்பறை ஒழுங்கு படுத்தல்கள், சுகாதார வசதிகள் என்பவற்றை ஒழுங்கு செய்வதற்கான காலமாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

இன்றையதினம் யாழ்ப்பாணத்தில் உள்ள சகல பாடசலைகளையும் கண்கானிப்பதற்காக பொது சுகாதார பரிசோதகர்கள், பிரதேச செயலாளர்கள், காவல்துறையினர் சென்றிருந்தனர்.

எதிர்வரும் ஜூலை 4ம் திகதி முதல் பாடசாலைகள் அனைத்தும் மாணவர்களோடு வழமைக்கு திரும்ப உள்ளது.