Home செய்திகள் நோய் தோற்று இன்றி தனிமைப்படுத்தப்படும் 1214 பேர்!

நோய் தோற்று இன்றி தனிமைப்படுத்தப்படும் 1214 பேர்!

15
0

மேல் மாகாணத்தின் பொது இடங்களில் முகக்கவசம் அணியாமல் வீட்டிற்கு வெளீயே சென்ற 1,214 பேரை தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தியுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். 

கொரோனா நோப் பரவலை கடும் சிரமங்களுக்கு மத்தியில் கட்டுப்படுத்தி நாட்டை மீள ஆரம்பிக்கும் முயற்சிகள் தற்போது இடம்பெற்று வரும் வேளையில் இவ்வாறான அக்கறையற்ற செயற்பாடுகளால் நாட்டிற்கே பெரும் ஆபத்து ஏற்படும் என்பதால் முகக்கவசம் கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது.

அந்த அறிவித்தலை அலட்சியம் செய்வோர் மீது இவ்வாறான கடும் நடவடிக்கையினை மேற்கொள்ள வேண்டி இருப்பதாக பொலிசார் தெரிவித்தனர்.