Home செய்திகள் கடந்த 24 மணித்தியாலங்களில் மட்டும் 340 பேர் போதைப்பொருளுடன் கைது!

கடந்த 24 மணித்தியாலங்களில் மட்டும் 340 பேர் போதைப்பொருளுடன் கைது!

4
0

கடந்த 24 மணித்தியாலங்களுக்குள் மேல் மாகாணத்தில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது போதைப்பொருளுடன் 340 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 

மேல் மாகாணத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபரின் அறிவுரைக்கு அமைய சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது. 

இதன்போது கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களிடம் இருந்து ஹெரோயின், கஞ்சா, கோடா மற்றும் ஐஸ் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.