Home செய்திகள் நயினா தீவிற்கான பாஸ் நடைமுறை ரத்து:

நயினா தீவிற்கான பாஸ் நடைமுறை ரத்து:

4
0

நயினாதீவிற்கு செல்வதற்காக புதிதாக கொண்டுவரப்பட்ட பாஸ் நடைமுறை தற்போது நீக்கப்பட்டுள்ளது.

நேற்று வெள்ளிக்கிழமை யாழ்.மாவட்ட பிரதி பொலிஸ்மா அதிபருடன் இவ்விடயம் தொடர்பில் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு கலந்துரையாடியதற்கமைய நயினாதீவிற்கு செல்வதற்கு பாஸ் நடைமுறை மற்றும் மட்டுப்பாடுகளும் விதிக்கப்படவில்லை என ஆணைக்குழுவுக்கு தெரிவித்ததுடன் உடனடியாகவே நயினாதீவு மற்றும் குறிகாட்டுவான் உப.பொலிஸ் நிலையங்களுக்கு அறிவிப்பதாகவும் யாழ்.மாவட்ட பிரதி பொலிஸ்மா அதிபர் தெரிவித்துள்ளார்.

குறிகாட்டுவான் மற்றும் நயினாதீவு உப காவலரண்களில் பொறுப்பதிகாரிகளின் கவனத்துக்கு மனித உரிமைகள் ஆணைக்குழுவினால் தெரிவிக்கப்படத்தையடுத்து தமக்கும் அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளதாகவும் தாம் இனி இவ்வாறான மட்டுப்பாடுகளில் விதிக்கமாட்டோம்” என தெரிவித்ததாக மனித உரிமைகள் ஆணைக்குழுவின் பிராந்திய இணைப்பாளர் ரி.கனகராஜ் இதனைத் தெரிவித்துள்ளார்.