Home செய்திகள் யாழ் பாடசாலைகளில் கிருமித் தொற்று நீக்கி மருந்து வீசும் பணிகள் ஆரம்பம்:

யாழ் பாடசாலைகளில் கிருமித் தொற்று நீக்கி மருந்து வீசும் பணிகள் ஆரம்பம்:

7
0

பாடசாலைகள் மீள ஆரம்பிக்கப்படும் நிலையில் பாடசாலை வளாகத்தில் கிருமித் தொற்று நீக்கி மருந்து வீசும் பணிகள் யாழ்ப்பாணத்தில் ஆரம்பிக்கப்பட்டது.

யாழ்ப்பாணம் பிரதேச செயலர் எஸ்.சுதர்சனின் ஒருங்கிணைப்பில் சிறப்பு அதிரடிப் படையினரால் இந்தப் பணி இன்று (24/06) காலை ஆரம்பிக்கப்பட்டது.

யாழ்ப்பாணம் பிரதேச செயலக பிரிவுக்கு உள்பட்ட பாடசாலைகளுக்கு இன்று புதன்கிழமை தொடக்கம் வரும் சனிக்கிழமை வரை பிரதேச செயலர் எஸ்.சுதர்சனின் ஒருங்கிணைப்பில் சிறப்பு அதிரடிப் படையினரால் கிருமித் தொற்று நீக்கி விசிறும் பணி முன்னெடுக்கப்படவுள்ளது.

இதன் முதல் கட்டமாகவே யாழ்ப்பாணம் திருக்குடும்பக் கன்னியர்மடம் கல்லூரியில் சிறப்பு அதிரடிப் படையினரால் கிருமித் தொற்று நீக்கி விசுறும் பணிகள் இன்று காலை ஆரம்பிக்கப்பட்டுள்ளன.