Home உலக செய்திகள் தமிழ் நாட்டில் ஒரே நாளில் 2174 பேர் பாதிப்பு – 48 பேர் மரணம்!

தமிழ் நாட்டில் ஒரே நாளில் 2174 பேர் பாதிப்பு – 48 பேர் மரணம்!

12
0

தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவிற்கு ஒரே நாளில் 2174 பேர் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளமை மக்கள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த இரு வாரங்களாக நாளுக்குநாள் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கொரோனா நோய்த் தொற்றுக்குள்ளாகி உள்ளனர்.

இதையடுத்து தமிழ்நாட்டில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 50,193 ஆக அதிகரித்துள்ளதாக மாநில சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.

மேலும், தனியார் மருத்துவமனையில் 10 பேர் உட்பட நேற்று (17/06) 48 பேர் உயிரிழந்துள்ள நிலையில், தமிழகத்தில் மட்டும் மொத்த மரணங்கள் 576 ஆக அதிகரித்துள்ளன.

இதேவேளை, இந்தியா முழுவதுமாக நேற்றைய தினம் மட்டும் 13,103 புதிய நோயாளர்கள் இனம் காணப்பட்டுள்ளதோடு, 341 பேர் கொரோனா நோயினால் மரணமடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.