Home செய்திகள் மொனராகலையில் பொலிஸாரின் துப்பாக்கி சூட்டில் ஒருவர் பலி!

மொனராகலையில் பொலிஸாரின் துப்பாக்கி சூட்டில் ஒருவர் பலி!

7
0

மொனராகலை, இத்தேகடுவ பிரதேசத்தில் பொலிஸார் மேற்கொண்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இச் சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது;

கொலை சம்பவம் ஒன்று தொடர்பில் பொலிஸாரால் தேடுப்பட்டு வந்த குறித்த நபர் மொணராகலை, இத்தேகடுவ பிரதேசத்தில் ஒழிந்து இருப்பதாக கிடைக்கப்பெற்ற தகவலுக்கு அமைய அவரை கைது செய்வதற்கு சென்றுள்ளது.

அப்போது போது சந்தேகநபர் பொலிஸார் மீது துப்பாக்கி சூடு நடத்தியுள்ளார். அதனை அடுத்து பொலிஸாரினால் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் சந்தேகநபர் படுகாயமடைந்த நிலையில் கைது செய்யப்பட்டு சிறிகல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேகநபரிடம் இருந்து துப்பாக்கி, கைக் குண்டு ஒன்று, மற்றும் கத்தி ஒன்றும் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது.