Home முக்கிய செய்திகள் நாடாளுமன்றம் மீண்டும் கூடும் திகதியை ஜனாதிபதி அறிவித்தே ஆக வேண்டும்: ரணில்

நாடாளுமன்றம் மீண்டும் கூடும் திகதியை ஜனாதிபதி அறிவித்தே ஆக வேண்டும்: ரணில்

8
0

ஜனாதிபதியின் வர்த்தகமானி அறிவிப்பு காலவதியாகியுள்ள நிலையில், அரசியலமைப்பினை மீறாது பாதுகாக்க வேண்டுமாயின் நாடாளுமன்ற அமர்வை ஆகஸ்ட் வரை ஒத்தி வைத்து தேர்தலுக்கு செல்ல வேண்டும். எனவும் நாடாளுமன்றம் மீண்டும் கூடும் திகதியை ஜனாதிபதி அறிவித்தே ஆக வேண்டும் எனவும் ரணில் விகிரமசின்க்க கூறியுள்ளார்.

ரணில் விக்கிரமசிங்கவின் கொள்ளுப்பிட்டிய இல்லத்தில் இடம்பெற்ற ஜ.தே. கட்சி உறுப்பினர்களுடனான சந்திப்பின் போதே அவர் இதனை தெரிவித்தார்.

தள்ளுபடி செய்யப்பட்ட மனுக்கள் ஜக்கிய தேசியக் கட்சி தாக்கல் செய்தவையாகவே மக்கள் கருதுகின்றனர். அது தவறு. நாம் தேர்தலை ஒத்திவைக்குமாறு நீதிமன்றம் செல்லவில்லை. அரசியல் கட்சி என்ற வகையில் எம்மால் தேர்தலை ஒத்திவைக்குமாறு கேட்க முடியாது.

தேர்தல் தொடர்பான ஜனாதிபதியின் வர்த்தமானி காலாவதி ஆகியுள்ள நிலையில், அன்ன்றிலிருந்து ஜனாதிபதியின் அறிவிப்பு செல்லுபடியஅகுமா..? இல்லையா…? என்பது தொடர்பான சட்டரீதியான வியாக்கியானத்தை தெரிந்து கொள்ளவே நாம் நீதிமன்றம் சென்றோம்.

தற்போது பாராளுமன்ற அமர்வை ஆகஸ்ட் வரை ஒத்திவைத்து தேர்தலுக்கு செல்ல வேண்டும். அவ்வாறு இல்லை எனில் அரசியலமைப்பு ரீதியில் நெருக்கடியான விடையமாகி விடும் எனவு அவர் தெரிவித்தார்.