Home செய்திகள் இரு சிறுவர் உட்பட மூவர் குளத்தில் மூழ்கி பலி!

இரு சிறுவர் உட்பட மூவர் குளத்தில் மூழ்கி பலி!

7
0

பதுளை – மடுல்சீமை, எல்ல பகுதியில் குளம் ஒன்றில் நீராடச் சென்ற தந்தை மற்றும் மகள் உட்பட மூவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர்.

இன்று (06/06) காலை இடம்பெற்ற இந்த சம்பவத்தில் 38-வயதுடைய தந்தையும் அவரது 13 வயது மகளும், மற்றும் 12-வயதுடைய அவர்களது உறவுமுறைச் சிறுமியுமே இவ்வாறு பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.

சடலங்கள் பொலிஸாரால் எடுதுச்செல்லப்பட்டு பசறை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளன.