Home தாயக செய்திகள் இலங்கையில் கொரோனா நோயாளர் எண்ணிக்கை 1797 ஆக உயர்வு!

இலங்கையில் கொரோனா நோயாளர் எண்ணிக்கை 1797 ஆக உயர்வு!

28
0

இலங்கையில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் COVID-19 வைரஸ் தாக்கத்தினால் பாதிக்கப்பட்டு இதுவரை 1797 பேர் கொரோனா நோயிற்கு உள்ளாகியிருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது.

குறித்த நோயினால் இலங்கையில் இதுவரை 11 பேர் உயிரிழந்துள்ளனர். நேற்று முந்தினம் 66 புதிய நோயாளர்களும், நேற்றைய தினம் 48 புதிய நோயாளர்களும் இனம்காணப்பட்டுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.

உலக அளவில் அந்தந்த நாட்டு மக்கள் விகிதாசாரத்துடன் ஒப்பிடுகையில் இலங்கையிலேயே கொரோனா நோயின் தாக்கம் அதிகமாக பதிவாகியுள்ளது.