Home உலக செய்திகள் இந்தியாவில், ஒரே நாளில் 9304 பேர் பாதிப்பு – 260 பேர் மரணம்!

இந்தியாவில், ஒரே நாளில் 9304 பேர் பாதிப்பு – 260 பேர் மரணம்!

18
0

இந்தியாவில் – பொருளாதார நடவடிக்கைகளுக்காக ஊரடங்கு கட்டுப்பாடுகளை படிப்படியாக தளர்த்துவதால் கொரோனா நோய் தொற்றுக்கு உள்ளாவோர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிக உயர்ந்துள்ளது.

இன்று காலை மத்திய சுகாதாரத்துறை வெளியிட்ட தகவலின்படி, கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 9304 பேருக்கு கொரோனா நோய் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதோடு இதுவரை இல்லாத அளவில், 260 பேர் மரணம் அடைந்துள்ளனர்.

இதையடுத்து, இந்தியாவில் மொத்தம் 216919 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். உயிரிழந்தோர் எண்ணிக்கையும் 6075 ஆக உயர்ந்துள்ளது.

நாடு முழுவதிலும் உள்ள பல்வேறு மருத்துவமனைகளில் 106737 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மகாராஷ்டிர மாநிலம் நோய்த்தொற்றில் தொடர்ந்து உச்சத்தில் உள்ளது. மகாராஷ்டிராவில் கொரோனா பாதிப்பு 75 ஆயிரத்தை நெருட்ஙகி உள்ளது. மொத்தம் 74860 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் 25872 பேருக்கும், டெல்லியில் 23645 பேருக்கும், குஜராத்தில் 18100 பேருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.